நிக்கி கல்ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமான 'டார்லிங்' படத்தில் தான் நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழ் திரையுலகில் இன்று பிசியான நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்

'டார்லிங்' படத்தை அடுத்து நிக்கி கல்ராணி நடித்த யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்குறான் குமாரு, மொட்டசிவா கெட்ட சிவா, மரகத நாணயம், ஹரஹர மகாதேவகி போன்ற படங்களில் நடித்தார். இதில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மற்றும்  ஹரஹர மகாதேவகி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் என்பதும், மரகத நாணயம் அனைத்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள சுந்தர் சியின் 'கலகலப்பு 2' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் தற்போது கீ, பக்கா, சார்லி சாப்ளின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

நடிப்பு மற்றும் கவர்ச்சி ஆகியவற்றை சரிசமமாக அளித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் நிக்கி கல்ராணிக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய, இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

கருணாநிதியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

ன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த சந்திக்கவுளார். இந்த அவருக்கு மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஆன்மீக அரசியல் தவறாகவே முடியும்: டிடிவி தினகரன்

ஆன்மீகம் என்பது தனி மனிதனை ஒழுங்குபடுத்தவே; அரசியலில் பயன்படுத்தினால் அது தவறாகத்தான் முடியும்.

தமிழகத்தில் தான் மிகப்பெரிய புரட்சிகள் தொடங்கியுள்ளது: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது:

பலூன் ஹிட் படம்தான். ஆனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இயக்குனர் சினிஷ்

பலூன் பட வெற்றியால் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.

எம்.எஸ்.பாஸ்கருக்கு சர்ப்ரைஸ் புத்தாண்டு பரிசு கொடுத்த மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

தமிழ் திரையுலகில் டப்பிங் கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது டப்பிங் கலைஞராக உள்ளார்.