நயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்

Nayanthara

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் பல வருடங்கள் ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம். அதன் பின்னர் அக்கா, அண்ணி, அம்மா வேடங்கள்தான் வரும். ஆனால் கடந்த 2005ஆம் ஆண்டு 'ஐயா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, 12 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். போட்டியே இல்லாமல் தொடர்ந்து வெற்றிநடை போடும் நயன்தாராவின் வெற்றிக்கு அவர் தேர்வு செய்யும் கேரக்டர் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் நயன்தாரா ஏற்று நடித்த முக்கிய கேரக்டர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஐயா-செல்வி:

Nayanthara

நயன்தாராவின் முதல் தமிழ்ப்படம். கிராமத்து பெண்ணாக, சரத்குமாரை காதலிக்கும் செல்வி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் வகையில் காதல், கோபம், பாசம், சோகம் என பல்வேறு பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்திய படம்

துர்கா - சந்திரமுகி:

Nayanthara

சந்திரமுகி: இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலி என்று கோலிவுட் திரையுலககையே ஆச்சரியப்படுத்திய படம். இந்த படத்தில் துர்கா என்ற இசை ஆசிரியர் கேரக்டரில் நடித்திருப்பார். ஜோதிகாவுக்கு முக்கிய கேரக்டர் என்றாலும் நயன்தாராவின் கேரக்டருக்கும் இந்த படத்தின் கதையில் பெரும்பங்கு உண்டு. அதை அவர் சரியாகவே பயன்படுத்தியிருந்தார்

சாஷா-பில்லா:

Nayanthara

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த முதல் படம். அவர் நடித்த முதல் ஆக்சன் படமும் இதுதான். பிகினி உள்பட கிளாமர், ஆக்சன் காட்சிகள் ஆகியவை ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

கீர்த்தி - யாரடி நீ மோகினி:

Nayanthara

முதல் பாதியில் ஐடி ஊழியர், இரண்டாம் பாதியில் கிராமத்து பெண் என இரண்டுவித கெட்டப்பில் இந்த படத்தில் நயன்தாரா நடித்திருப்பார். தனுஷுடன் காதல், பின்னர் குடும்பத்தினர்களின் கட்டாயத்தில் உறவினர் பையனை திருமணம் செய்ய வேண்டிய நிலை அதே நேரத்தில் காதலையும் கைவிடமுடியாத இக்கட்டான நிலை என இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்புக்கு சரியான தீனி கிடைத்தது

சந்திரிகா - பாஸ் என்கிற பாஸ்கரன்:

Nayanthara

ஒரு முழுநீள நகைச்சுவை படம். கண்ணை கசக்காமல், கிளாமர் இல்லாமல் ஒரு இயல்பான நகைச்சுவை தன்மையுடைய நயன்தாராவை இந்த படத்தில் பார்க்கலாம். ஆர்யாவுக்கு பொருத்தமான ஜோடி என்றும் இந்த படத்தால் விமர்சிக்கப்பட்டவர்

ரெஜினா- ராஜாராணி:

Nayanthara

காதலில் தோல்வி அடைந்து பின்னர் தந்தையின் வற்புறுத்தலுக்காக இன்னொருவரை திருமணம் செய்யும் கேரக்டர். ஜெய்யுடனான காதல் காட்சியிலும் சரி, ஆர்யாவுடனான திருமணத்திற்கு பிந்தைய காட்சியிலும் சரி, நயன்தாராவின் நடிப்பில் அதிக மெச்சூரிட்டி தெரிந்த கேரக்டர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அவரது மிகச்சிறந்த நடிப்பில் ஒன்று

அனாமிகா-நீ எங்கே என் அன்பே:

Nayanthara

தனது கணவர் ஒரு தீவிரவாதி என்று தெரிந்தும், கணவர் என்றும் பாராமல் திட்டம் போட்டு கணவரை கொலை செய்து நாட்டை காப்பாற்றும் ஒரு முக்கிய கேரக்டர். நயன்தாராவின் வித்தியாசமான கேரக்டர்களில் ஒன்று

மஹிமா-தனிஒருவன்:

Nayanthara

இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் சிறிய அளவே இருந்தாலும் அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். உடல்மொழியாலும் கொடுக்கப்பட்ட வசனங்கள் மூலமும் ரசிகர்களை ஈர்த்த நயன்தாரா, 'அவனை எதிர்க்கிறேன்னு உன் நிதானத்தை இழந்துட்டியே என்று ரவியிடம் சொல்லுமிடம் ஆகட்டும், எதுவாக இருந்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டே பேசவும் என்று எழுதிக்காட்டும் காட்சிகள் ஆகட்டும், ரசிக்கத்தக்க காட்சிகள்.

மாயா-மாயா:

Nayanthara

நயன்தாராவின் மிகச்சிறந்த கேரக்டர்களில் ஒன்று. பண நெருக்கடி காரணமாக ஒரு திகில் படத்தை தியேட்டரில் தனியாக பார்க்கும் காட்சியில் அவரது அனுபவம் பளிச்சிடும். ஒன்மேன் ஷோ போன்று இந்த படம் முழுக்க முழுக்க நயன்தாராவின் கேரக்டரையே சுற்றிவரும்படி அமைக்கப்பட்டிருக்கும்

காதம்பரி-நானும் ரெளடிதான்:

Nayanthara

காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டர் தான் இந்த காதம்பரி. நகைச்சுவை, சோகம், காதல், பழிவாங்கும் குணம் என ஒரே படத்தில் பல திறமைகளை வெளிப்படுத்திய கேரக்டர்

பவளக்கொடி-டோரா:

Nayanthara

நம்பன் ஒன் நாயகி நயன்தாரா என்பதை நிரூபிக்க அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்புதான் இந்த டோரா பவளக்கொடி கேரக்டர். கழுத்து வரை நீளும் சுடிதார் உடையணிந்த அழகு. முற்றுப்புள்ளி இல்லாத முழு நீள வசனங்கள், ‘அண்ணாமலை’ சவால்கள், ‘அந்நியன்’ மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு

மதிவதினி - அறம்:

Nayanthara

நயன்தாரா முதன்முதலில் கலெக்டர் வேடத்தில் நடித்த படம். மதிவதினி கேரக்டரில் அவர் நடித்தார் என்று கூறுவதைவிட வாழ்ந்தார் என்றே கூறலாம். முழு ஈடுபாட்டுடன் கேரக்டரை மெருகேற்றி நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் பல்வேறு பக்கங்களில் இருந்து கிடைத்தது என்பதே இந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது..

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் பல வருடங்கள் ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம்.