close
Choose your channels

'தனி ஒருவன்' மோகன் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Tuesday, May 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எடிட்டர் மோகன் அவர்களின் மகனும், பிரபல இயக்குனரும், பிரபல நடிகர் ஜெயம் ரவியின் சகோதரருமான 'மோகன் ராஜா' அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கோலிவுட் திரையுலகில் 'ஜெயம்' படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான ராஜா, ரவி சகோதரர்கள் இந்த படத்தின் மாபெரும் வரவேற்பு காரணமாக 'ஜெயம் ராஜா', 'ஜெயம் ரவி' என்று அழைக்கப்பட்டனர். இந்த படத்தை அடுத்து இரு சகோதரர்களும் இணைந்த எம்.குமரன் S/O மகாலட்சுமி, 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'தில்லாலங்கடி' ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகியது.

இதன்பின்னர் முதல்முறையாக இளையதளபதி விஜய் நடித்த 'வேலாயுதம்' படத்தை இயக்கிய ராஜா, இந்த படத்தின் வெற்றியால் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றார்.

'வேலாயும்தம்' படம் வரை மற்ற மொழி படங்களை ரீமேக் செய்து வந்த மோகன் ராஜா, சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் 'தனி ஒருவன்'. இந்த படம் 2015ஆம் ஆண்டின் நம்பர் ஒன் வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது.

தற்போது மோகன் ராஜா, சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் வெற்றி பெறுவதோடு கோலிவுட்டில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் மோகன்ராஜா அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment