நான்கே படத்தில் 400 படங்களின் புகழ்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்..!

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

தமிழ் திரை உலகில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய லோகேஷ் கனகராஜ் இன்று இந்தியாவின் முன்னணி நடிகர்களையே திரும்பிப் பார்க்கும் வகையில் 400 படங்கள் இயக்கிய புகழை பெற்றுள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாநகரம்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் பல மடங்கு தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்த்தியான விறுவிறுப்பான திரைக்கதை, அடுத்தது என்ன என்பதை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டது.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தின் வெற்றி தமிழ் திரை உலகின் பார்வை அவர் மேல் விழுந்தது. கார்த்தி நடித்த ‘கைதி’, படம் விஜய் நடித்த ’பிகில்’ படத்துடன் வெளியான போதிலும் ‘கைதி’ படத்திற்கு தான் மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம் ’திரைப்படம் தான் அவரை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் உடன் பணிபுரிய வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு இந்த படத்தின் வெற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 4 சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இன்று இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்து உள்ளார். இந்த நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு அவர் இயக்கி வரும் ’லியோ’ திரைப்படம் இதுவரை இல்லாத சாதனை செய்ய வாழ்த்துவோம்.

More News

கே.பாலசந்தர் அறிமுகம் செய்த 2 இசையமைப்பாளர்களுக்கும் ஆஸ்கர்.. ஜீனியஸ்களை கண்டுபிடித்த ஜீனியஸ்..!

 இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அறிமுகம் செய்த இரண்டு இசையமைப்பாளர்களுமே ஆஸ்கர் விருதுகளை வென்று உள்ளனர் என்பதை அடுத்து ஜீனியஸ்களை கண்டுபிடித்த ஜீனியஸ்

நான்  வேணும்னா வேலையை ராஜினாமா செய்திடட்டுமா?  ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் நேற்று முடிவடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பந்து வீசியது

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனா? 'ரோலக்ஸ்' மாதிரி மாஸ் கேரக்டரா?

ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் 'விக்ரம்' படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டர் போல் மாஸ் கேரக்டர் இது என்றும் கூறப்படுவது

மிகப்பெரிய இழப்பு.. மறைந்த நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு..!

நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விருது வென்ற படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா?

ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழ் குறும்படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.