மணிவிழா நாயகன் கே.எஸ்.ரவிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குனராக வலம் வருவதோடு, இன்றும் இளையதலைமுறை இயக்குனர்களுக்கு இணையாக வெற்றி படங்கள் கொடுத்து வரும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு நமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு 60வது பிறந்த தினம் என்பதால் சமீபத்தில் அவரது மணிவிழா சிறப்பாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
பிரபல இயக்குனர் விக்ரமன் அறிமுகமான 'புதுவசந்தம்' படத்தில் உதவியாளராக பணியாற்றிய கே.எஸ்.ரவிகுமார் கடந்த 1990ஆம் ஆண்டு 'புரியாத புதிர்' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்து வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரெடுத்த கே.எஸ்.ரவிகுமார், பாரதிராஜாவுக்கு பின்னர் அதிக கிராமிய கதையம்சங்கள் உள்ள படத்தை இயக்கியவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக உள்பட அவருடைய பல படங்களில் கிராமிய மணத்துடன் இருந்ததுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள் ஆகும்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்கள் அனைவரையும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் அவர்கள் நடித்த 'முத்து', 'படையப்பா' கமல்ஹாசன் நடித்த 'அவ்வை சண்முகி, 'தெனாலி', 'தசாவதாரம்' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த பட்டியலில் உள்ள படங்கள் ஆகும்.
அஜித்துடன் 'வில்லன்', 'வரலாறு', விஜய்யுடன் 'மின்சார கண்ணா', 'சூர்யாவுடன் 'ஆதவன், 'சிம்புவுடன் 'சரவணா' ஆகியவை கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய குறிப்பிடத்தக்க மேலும் சில படங்கள் ஆகும்.
நடிப்பு மட்டுமின்றி குணசித்திர, வில்லன் கேரக்டர்களிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த 60வயதிலும் இளைஞர் போல் கோலிவுட் திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கே.எஸ்.ரவிகுமார் இன்னும் பல வெற்றிகளை குவிக்க இந்த இனிய பிறந்த நாளில், நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments