காஜல் அகர்வாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Sunday,June 19 2016]

பாரதிராஜா அறிமுகப்படுத்திய பல நாயகிகள் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு 'பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
பொம்மலாட்டம்' படத்தின் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கிய காஜல் அகர்வால் அதே வருடத்தில் பரத்துடன் 'பழனி' மற்றும் வெங்கட்பிரபுவின் 'சரோஜா' ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்தார். சரண் இயக்கத்தில் அவர் நடித்த 'மோதி விளையாடு' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் காஜல் அகர்வாலை முன்னணி நடிகையாக மாற்றிய திரைப்படம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'மகதீரா'. தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளிவந்த இந்த நேரடி தமிழ்ப்படங்களுக்கு இணையாக வெற்றி பெற்றது.
அதன்பின்னர் கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' படத்தில் நடித்த காஜலுக்கு இளையதளபதி விஜய்யுடன் நடித்த 'துப்பாக்கி' சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய்யுடனான கெமிஸ்ட்ரி சூப்பராக அமைந்ததால் மீண்டும் அவருடன் 'ஜில்லா' படத்தில் இணைந்து நடித்தார்.
தனுஷூடன் மாரி', விஷாலுடன் 'பாயும் புலி' ஆகிய படங்களும் காஜலுக்கு பெயர் பெற்று தந்த படங்கள் ஆகும்.
தற்போது ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்', மற்றும் விக்ரமுடன் 'கருடா' படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மேலும் பல வெற்றிகளை குவிக்க இந்த பிறந்தநாளில் அவரை வாழ்த்துகிறோம்.

More News

சிம்பு படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'அச்சம்....

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் விஜய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில்...

சென்னை-28 இரண்டாம் பாகத்தில் 6 இயக்குனர்கள்

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார்...

அஜித்-விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசை. சொன்னது யார் தெரியுமா?

நடிகராக வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட்டில் நுழைந்து பின்னர் மேனேஜர், நிர்வாகத்தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் செந்தில்...

சீயான் விக்ரம் 'இருமுகன்' டீசர் ரிலீஸ் தேதி

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.