பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோதிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் பத்து ஆண்டுகளாக கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு IndiaGlitz தனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தல அஜித் நடித்த 'வாலி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜோதிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'சந்திரமுகி', உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'தெனாலி', 'வேட்டையாடு விளையாடு', தல அஜித்துடன் 'வாலி, 'முகவரி', 'பூவெல்லாம் உன் வாசம்', 'ராஜா', விஜய்யுடன் 'திருமலை', 'குஷி', சரத்குமாருடன் 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'சிம்புவுடன் 'சரவணா', 'மன்மதன், என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
சூர்யாவுக்கு மிக பொருத்தமான ஜோடி என கருதப்பட்டதால் அவருடன் மட்டும் ஏழு படங்கள் ஜோடியாக நடித்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல், ஜூன் ஆர், ஆகிய படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. குறிப்பாக 'காக்க காக்க' படத்தில் நடித்தபோதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
திரையில் பொருத்தமான ஜோடியாக இருந்த சூர்யா-ஜோதிகா நிஜத்திலும் ஜோடியாகினர். கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்த ஜோதிகாவுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015ஆம் ஆண்டு '36 வயதினிலேயே' என்ற படத்தில் நடித்தார். இயற்கை காய்கறி மற்றும் திருமணமான பெண்களின் தனிமை குறித்த விழிப்புணர்வு திரைப்படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 'மகளிர் மட்டும் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' என்ற படத்திலும், மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.
திரையுலகம், குடும்பம் என இரண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, திரையுலகில் இன்னும் பல சாதனைகளையும் விருதுகளையும் குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout