பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி!!

  • IndiaGlitz, [Saturday,September 10 2016]

பிரபல எடிட்டர் மோகன் அவர்களின் இரண்டு புதல்வர்களான ரவி மற்றும் ராஜா ஆகியோர் அறிமுகமான படம் 'ஜெயம்' மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இருவரது பெயர்களுக்கும் முன்பும் 'ஜெயம்' ரவி, மற்றும் 'ஜெயம் ராஜா' என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. முதல் படத்திலேயே வெற்றி பெற்று இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் ஜெயம் ரவிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம், எம்.குமரன் S/0 மகாலட்சுமி ஆகிய முதல் இரண்டு வெற்றி படங்களை அடுத்து கோலிவுட்டில் ஜெயம் ரவியும் ஒரு ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார். அதன் பின்னர் தாஸ், மழை, இதயத்திருடன் ஆகிய படங்கள் சுமாராக ஓடினாலும் மீண்டும் அண்ணன் இயக்கத்தில் ரவி நடித்த 'உனக்கும் எனக்கும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெயம் ரவியின் மிகப்பெரிய முதல் சூப்பர் ஹிட் படம் 'பேராண்மை. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ஜெயம் ரவிக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
மேலும் கடந்த ஆண்டு ஜெயம் ரவி திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி ஆண்டு என்றே கூறலாம். ரோமியோ ஜூலியட்', 'சகலகலாவல்லவன்', 'தனி ஒருவன்', 'பூலோகம்' என்ற நான்கு வெற்றி படங்களில் அவர் நடித்தார். அதிலும் குறிப்பாக 'தனி ஒருவன்' மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றது. இந்த ஒரே படம் அவருக்கு SIIMA விருது, எடிசன் விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்று தந்தது.
ஜெயம் ரவி மேலும் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை ஏற்படுத்த இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.