நடிகை தமன்னாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Wednesday,December 21 2016]

நயன்தாரா, த்ரிஷாவை அடுத்து கோலிவுட்டில் கடந்த பத்து வருடங்கள் நாயகியாக வலம் வரும் நடிகை தமன்னா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும், பாலிவுட்டிலும் வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா கடந்த 2006ஆம் ஆண்டு ஜோதிகிருஷ்ணாவின் 'கேடி' படத்தில் அறிமுகமானார். ஆனாலும் அவர் ரசிகர்கள் மனதில் நிற்க ஆரம்பித்தது இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'கல்லூரி' படத்தில்தான். ஒரு அமைதியான கல்லூரி மாணவியாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார்.

விஜய்யுடன் சுறா, அஜித்துடன் 'வீரம்', சூர்யாவுடன் 'அயன்', தனுஷுடன் 'படிக்காதவன்', 'வேங்கை', கார்த்தியுடன் 'பையா', 'சிறுத்தை', 'தோழா' என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார்.

'ஆனந்த தாண்டவம்', 'கண்டேன் காதலை', ஆகிய படங்கள் தமன்னாவின் நடிப்புக்கெனவே ஓடிய படங்கள். மேலும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' தமன்னாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் வெளியான 'தேவி' மற்றும் 'தர்மதுரை' ஆகிய படங்களும் தமன்னாவின் வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்திய படங்கள் ஆகும். மேலும் தமன்னா தற்போது நடித்து கொண்டிருக்கும் பாகுபலி 2 மற்றும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் ஆகும்.

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் தமன்னா இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து தொடர்ந்து பேரும், புகழும் விருதுகளும் பெற மீண்டும் ஒருமுறை நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

'தல' அஜித்தின் புத்தாண்டு திட்டம் என்ன?

தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்திற்காக ஓய்வின்றி நடித்து வரும் அஜித், விரைவில் பல்கேரியா படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கிளைமாக்ஸ் மட்டுமே 20 மணி நேரமா? ஆச்சரியத்தில் மூழ்கிய எடிட்டர்

விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்த 'கவண்' படத்தை இயக்கி முடித்துள்ள...

ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்திக்கு சசிகலா எழுதிய திடீர் கடிதம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி...

இயக்குனர்கள் பட்டியலில் இணையும் இன்னொரு பிரபல நடிகர்

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர்கள் ஆவது புதிதல்ல. உலக நாயகன் கமல்ஹாசன்...

ஜெயலலிதா சொத்து குறித்து வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம். நீதிமன்றம் அதிரடி

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா...