close
Choose your channels

ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Tuesday, August 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் ஹன்சிகா இன்று தனது 25வது பிறந்த நாளை இனிமையாக கொண்டாடி வருகிறார். அவர் மேலும் பல வெற்றிகள் குவிக்க இந்த பிறந்தநாளில் நம்முடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான ஹன்சிகா, தனது மூன்றாவது படத்திலேயே விஜய்யின் 'வேலாயுதம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படம் தந்த வெற்றியால், தொடர்ந்து 'ஒருகல் ஒருகண்ணாடி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சிங்கம் 2', 'மான் கராத்தே', 'அரண்மனை' 'ரோமியோ ஜூலியட், போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.
நடிப்பு மட்டுமின்றி ஹன்சிகாவுக்கு சமூக சேவையிலும் ஈடுபாடு அதிகம். தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போது குழந்தைகளை தத்தெடுத்து வரும் ஹன்சிகாவிடம் தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஹன்சிகா, தான் வளர்க்கும் குழந்தைகளுடன் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பார். மேலும் தனது சொந்த செலவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்து பெண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அமைப்புக்கு இவர் பிராண்ட் அம்பாசிடராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் கடந்த ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு சென்னை மக்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது ரூ.15 லட்சம் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்தார். மேலும் சமீபத்தில் நடைபாதைகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு ஹன்சிகா போர்வை உள்பட ஒருசில பொருட்கள் கொடுத்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
திறமை, அழகு மற்றும் சமூக சேவை செய்யும் குணம் ஆகியவை ஒருங்கே பெற்ற நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, மென்மேலும் திரையுலகிலும் சமூக சேவையிலும் புகழ்பெற இந்த பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment