இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கடந்த 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ்க்கு மூன்றாவது படமே அஜித் நடித்த ’கிரீடம்’ என்ற படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். ஜீவி பிரகாஷ்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் கிடைத்த திரைப்படம் என்றால் அது செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று கூறலாம். அதன்பின் ’மதராசபட்டணம்’ உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் தளபதி விஜய் நடித்த ’தலைவா’ என்ற படத்திற்கு இசை அமைத்தார் என்பதும், அதன்பின் விஜய் நடித்த ’தெறி’ படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது இசையமைப்பாளராக மட்டுமின்றி கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் பென்சில், குப்பத்துராஜா, வாட்ச்மேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை சுமார் 10 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ்க்கு மீண்டும் நமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்

More News

மன்னிப்பை ஏற்க முடியாது, புகார் அளிக்க போவது உறுதி: பாடகி சின்மயி திட்டவட்டம்

தற்போது மிக வேகமாக பரவி வரும் கிளப் ஹவுஸ் என்ற குரல் வழி பேசும் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக

டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து தமிழ் நடிகையின் கருத்து: ரசிகர்கள் குழப்பம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார்

இன்று என்னிடம் எதுவும் கேளுங்கள்.....! பூனம் பாண்டே-வால் அதிரும் டுவிட்டர் களம்....!

நீண்ட நாள் இடைவெளிக்குப்பின், டுவிட்டரே கதி கலங்கும் அளவிற்கு பூனம் பாண்டே ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

சங்கித்தனமான தொடர் " தி பேமிலி மேன்"....! பிரபல யுடியூபர் காரசார பேச்சு.....!

அண்மையில் வெளியான தி பேமிலி மேன்-2 என்ற வெப்-தொடர், தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

கூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்!

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் டெக் நிறுவனங்களில் பணியாற்றி வரும் சிஇஓக்களின் சம்பளப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.