ஜிவி பிரகாஷூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Wednesday,June 13 2018]
இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் பயணம் செய்து இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகனான ஜிவி பிரகாஷ், அவருடைய சாயல் சிறிதும் இல்லாமல் திரையிலகில் இசையமைப்பாளராக இருப்பதே ஒரு பெரிய சாதனைதான். கடந்த 2006ஆம் ஆண்டு 19 வயதில் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் ஜிவி பிரகாஷ். அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அடுத்த ஆண்டே அதாவது 2007ஆம் ஆண்டே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'குசேலன்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் இயக்குனர் பாலா இயக்கிய 'பரதேசி' படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், அவர் இயக்கத்தில் உருவான 'நாச்சியார்' படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். அதேபோல் விஜய் நடித்த 'தலைவா' மற்றும் 'தெறி' படங்களுக்கு இசையமைத்த ஜிவி, அஜித் நடித்த 'கிரீடம்' படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இயக்குனர்கள் வெற்றிமாறன், விஜய் போன்ற ஒருசில இயக்குனர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு 'டார்லிங்' என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த படத்தின் வெற்றி அவரை பிசியான ஹீரோவாக மாற்றிவிட்டது. இன்றைய நிலையில் கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் மட்டுமே. இவரது கைவசம் தற்போது ஒன்பது படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசை, நடிப்பு என இரண்டு துறைகளில் வெற்றி பெற்று பல சாதனைகளை நிகழ்த்த இந்த பிறந்த நாளில் ஜிவி பிரகாஷூக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்