'தல 57' இயக்குனர் சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Friday,August 12 2016]

பிரபல இயக்குனர் சிவா தமிழில் இயக்கியது மூன்றே மூன்று படங்கள்தான். அவற்றில் இரண்டு படங்கள் அஜித் நடித்த வீரம் மற்றும் 'வேதாளம்'. மேலும் அஜித்துடன் இணைந்து தற்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய பிறந்த நாளை பல்கேரியா படப்பிடிப்பில் கொண்டாடுகிறார். அவருக்கு சக கலைஞர்களும் படப்பிடிப்பு குழுவினர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை உளமாற தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த 2011ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா நடித்த 'சிறுத்தை' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான சிவா, அந்த படத்தின் மாபெரும் வெற்றியால் 'சிறுத்தை சிவா' என்றே அழைக்கப்பட்டார். போலீஸ், ஜாலியான திருடன் என இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்த இந்த படம், கார்த்தி, சிவா ஆகிய இருவருக்குமே திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியால்தான் சிவாவுக்கு அஜித்தின் 'வீரம்' வாய்ப்பு கிடைத்தது. கிராமிய பின்னணி கொண்ட இந்த படத்தில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பை சிவா வெளிக்கொண்டு வந்தார். இதனையடுத்து மீண்டும் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தை சிவா இயக்கினார். கடந்த தீபாவளி தினத்தில் வெளியான இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.80 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.

'வேதாளம்' வெற்றியை அடுத்து அஜித்தின் குட்புக்கில் நிரந்தர இடம்பிடித்த சிவா, தற்போது அவர் நடித்து வரும் 57வது படத்தை இயக்கிவருகிறார். பெரும்பொருட்செலவில் அஜித் இண்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த படமும் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைய நமது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

சிம்புவின் 'AAA' கதை இதுதானா?

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 9 என அறிவிக்கப்பட்டுள்ள...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பின்னர் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் பிரபல இயக்குனர் செல்வராகவன்...

சென்னையில் 'கபாலி' படம் பார்த்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி அமெரிக்கா, கனடா உள்பட உலகின்...

மீண்டும் ஒரு டபுள் ஆக்சன் படத்தில் சரத்குமார்

'நாட்டாமை', 'சூர்யவம்சம்', 'சண்டமாருதம் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்த சரத்குமார் மீண்டும்.....

சல்மான்கானின் சுல்தான்' செய்த மிகப்பெரிய சாதனை

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஆனாலே வெற்றி படங்களாக கருதப்பட்டு.....