close
Choose your channels

தனுஷூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தில் ஒரு மாணவனாக அறிமுகமான துடிப்புள்ள இளைஞரான தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், என பல்வேறு அவதாரங்களுடன் ஜொலித்து வருகிறார். இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வரும் தனுஷூக்கு நமது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்திலேயே 'யார் இந்த இளைஞன்' என்று கேட்க வைக்கும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ் இரண்டாவது படமான 'காதல் கொண்டேன்' படத்திலேயே தன்னை ஒரு முழு நடிகர் என்பதை நிரூபித்தார்.
அதன் பின்னர் திருடா திருடி, புதுப்பெட்டை, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற வெற்றி படங்களில் நடித்த தனுஷ், வெற்றிமாறனின்' பொல்லாதவன்' படம் மூலம் தனது இன்னொரு பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தினார். வெற்றிமாறனுடன் அவர் மீண்டும் இணைந்த 'ஆடுகளம்' தனுஷூக்கு தேசிய விருது என்ற பெருமையை பெற்று தந்தது. 'யாரடி நீ மோகினி', 'மாப்பிள்ளை', வேலையில்லா பட்டதாரி, அனேகன், போன்ற படங்கள் தனுஷின் வெற்றி படங்களில் சில...

தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வென்ற நடிகர்கள் மிகவும் குறைவு என்ற நிலையில் அங்கும் தனது வெற்றியை பதிவு செய்தார். தனுஷ் நடித்த 'ராஜண்ணா' மற்றும் 'ஷமிதாப்' இரண்டுமே வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தனுஷ் மென்மேலும் வெற்றிகளை குவிக்க இந்த பிறந்த நாளில் மீண்டும் அவரை வாழ்த்துகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment