கேத்ரினா தெரசாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Saturday,September 10 2016]

'கபாலி' இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

முதல் படமான 'மெட்ராஸ்' படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்து சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் கேத்ரினா. 'கலையரசி என்ற கேரக்டரில் கேத்ரினா நடித்த இந்த படம் அவருக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, எடிசன் விருது உள்பட ஒருசில விருதுகளை பெற்று தந்தது.

முதல்படமே வெற்றி படமாக அமைந்ததால் ராசியான நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட கேத்ரினா அடுத்ததாக 'ருத்ரம்மாதேவி, கதகளி, கணிதன் ஆகிய வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டு வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார்.

தற்போது கேத்ரினா, விஷ்ணுவிஷாலுடன் 'வீரதீர சூரன்', ஆர்யாவுடன் 'கடம்பன்' ஆகிய படங்களில் நடித்து வருவதோடு சிரஞ்சீவியின் 'கில்லாடி நம்பர் 150' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதிலும் கேத்ரினா இன்னும் பல வெற்றிகளை குவிக்க இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்