close
Choose your channels

கேப்டன் விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று அதிகாலை முதல் தேமுதிக தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தங்களுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 1980ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தார். திரையுலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களுக்கு மத்தியில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரை உலகை அடுத்து அவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்தார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரண்டு ஆளுமையான தலைவர்கள் தமிழகத்தில் இருக்கும் போதே புதிய கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே சுமார் 8 சதவீத ஓட்டுகள் பெற்றார் என்பதும், அவர் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றார்.

இந்த நிலையில் இன்று விஜயகாந்த் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தனது பிறந்த நாளை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எளிமையாக கொண்டாடவும் என்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும் என்றும் அவர் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment