முருகதாஸ் அவர்களுக்கு முத்தான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் ஆகிய இயக்குனர்களுக்கு பின்னர் அதிக இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்று கூறினால் அது மிகையாகாது. 'எங்கேயும் எப்போதும்' எம்.சரவணன், 'கணிதன்' சந்தோஷ், 'டிமாண்டி காலனி' அஜய்ஞானமுத்து, 'மான் கராத்தே' திருக்குமரன், 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் உள்ளிட்ட பல இயக்குனர்களை கோலிவுட்டில் உருவாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு IndiaGlitz சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
பல அறிமுக இயக்குனர்களுக்கு வாழ்வளித்த தல அஜித்தின் 'தீனா' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவருடைய ஒவ்வொரு படமும் ஒரு சமூக கருத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைக்கும் அளவுக்கு இருக்கும். பெரிய மருத்துவமனைகளில் நடைபெறும் போலி சிகிச்சைகள், ஸ்லீப்பர் செல், போதி தர்மர் உள்ளிட்ட பல விஷயங்கள் அவருடைய படங்கள் மூலமே மக்களுக்கு தெரிய வந்தது
முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தில் ஊழலுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், ஏழாம் அறிவு படத்தில் நமது முதாதையர்களின் பெருமைகள், ஸ்லீப்பர் செல்களை எதிர்த்து போராடும் ராணுவ வீரன் குறித்து 'துப்பாக்கி', விவசாயிகளின் பிரச்சனைகளை தெருவுக்கு கொண்டு வரும் 'கத்தி' உள்ளிட்ட அவருடைய படங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் பின்னாளில் உண்மையாகவே நிகழ்ந்தவை என்பதே அவருடைய படங்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது.
இன்னும் நான்கு நாட்களில் அவருடைய அடுத்த படமான 'ஸ்பைடர்' வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திலும் நிச்சயம் மக்களுக்கு தேவையான ஒரு கருத்தை தெரிவித்திருப்பார் என்றே கருதப்படுகிறது. இந்த படம் நல்ல வெற்றி பெறுவதோடு விருதுகளையும் குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments