முருகதாஸ் அவர்களுக்கு முத்தான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் ஆகிய இயக்குனர்களுக்கு பின்னர் அதிக இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்று கூறினால் அது மிகையாகாது. 'எங்கேயும் எப்போதும்' எம்.சரவணன், 'கணிதன்' சந்தோஷ், 'டிமாண்டி காலனி' அஜய்ஞானமுத்து, 'மான் கராத்தே' திருக்குமரன், 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் உள்ளிட்ட பல இயக்குனர்களை கோலிவுட்டில் உருவாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு IndiaGlitz சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

பல அறிமுக இயக்குனர்களுக்கு வாழ்வளித்த தல அஜித்தின் 'தீனா' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவருடைய ஒவ்வொரு படமும் ஒரு சமூக கருத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைக்கும் அளவுக்கு இருக்கும். பெரிய மருத்துவமனைகளில் நடைபெறும் போலி சிகிச்சைகள், ஸ்லீப்பர் செல், போதி தர்மர் உள்ளிட்ட பல விஷயங்கள் அவருடைய படங்கள் மூலமே மக்களுக்கு தெரிய வந்தது

முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தில் ஊழலுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், ஏழாம் அறிவு படத்தில் நமது முதாதையர்களின் பெருமைகள், ஸ்லீப்பர் செல்களை எதிர்த்து போராடும் ராணுவ வீரன் குறித்து 'துப்பாக்கி', விவசாயிகளின் பிரச்சனைகளை தெருவுக்கு கொண்டு வரும் 'கத்தி' உள்ளிட்ட அவருடைய படங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் பின்னாளில் உண்மையாகவே நிகழ்ந்தவை என்பதே அவருடைய படங்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது.

இன்னும் நான்கு நாட்களில் அவருடைய அடுத்த படமான 'ஸ்பைடர்' வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திலும் நிச்சயம் மக்களுக்கு தேவையான ஒரு கருத்தை தெரிவித்திருப்பார் என்றே கருதப்படுகிறது. இந்த படம் நல்ல வெற்றி பெறுவதோடு விருதுகளையும் குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

தூங்கும் அரசு, செவிடர் காதில் ஊதிய சங்கு: கமல்ஹாசனின் காட்டமான டுவீட்டுக்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவருடைய கருத்துக்களும் முன்பை விட தற்போது கொஞ்சம் காட்டமாகவே வெளிப்பட்டு வருகிறது

ராம்கியின் ரீஎண்ட்ரி 'இங்கிலீஷ் படம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆகியுள்ள படம் 'இங்கிலீஷ் படம்.

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு விஷால் செய்த கெளரவம்

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை இழந்தது.

இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது.