லிட்டில் ஏஞ்சல் அனோஷ்காவுக்கு இன்று 8வது பிறந்த நாள். ரசிகர்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Sunday,January 03 2016]

தல அஜித்-ஷாலினி நட்சத்திர தம்பதியினரின் மூத்த மகள் அனோஷ்கா இன்று தனது 8வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அஜித் ரசிகர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமுக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு அஜித்-ஷாலினி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் எட்டு ஆண்டுகளுக்கு கழித்து அதாவது கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்த பெண்குழந்தை அனோஷ்கா.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனோஷ்காவிற்கு அவருடைய பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நாமும் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை லிட்டில் ஏஞ்சலுக்கு தெரிவித்து கொள்கிறோம்.