ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,December 21 2015]

நடிகை, பாடகி, இசையமைப்பாளர், டான்சர் என பல அவதாரங்களில் வலம்வரும் ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

'கண்டநாள் முதல்' என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமான ஆண்ட்ரியா, கவுதம் மேனன் இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடினார். பின்னர் அவருடைய அடுத்த படமான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஒரு வெயிட்டான கேரக்டரில் நடித்தார்.

இதன்பின்னர் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்', அஜீத்தின் 'மங்காத்தா', ஆகிய படங்களில் நடித்த ஆண்ட்ரியா உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்' மற்றும் 'உத்தமவில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னகை', சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை', ஆகிய வெற்றி படங்களிலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். தற்போது ராம் இயக்கிவரும் 'தரமணி' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகையாக மட்டுமின்றி சிறந்த பாடகியாகவும் விளங்கி வரும் ஆண்ட்ரியா, 'அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'கண்ணும் கண்ணும் நோக்கியா', 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்ற 'உன் மேல ஆசைதான்', 'பில்லா 2' படத்தில் மதுரைப்பொண்ணு உள்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் 'தரமணி' படத்திற்காக ஒரு புரமோஷன் பாடலை கம்போஸ் செய்து, எழுதி பாடியும் உள்ளார். இவ்வாறு பல்வேறு திறமைகள் கொண்ட ஆண்ட்ரியா கோலிவுட் திரையுலகில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க இந்த பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.

More News

சிம்பு பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லைகா

விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'எந்திரன் 2' படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது....

பீப் பாடலால் ஏற்பட்ட களங்கத்தை கண்ணீரால் துடைக்கின்றேன். டி.ஆர்

பீப் பாடல் குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று சிம்பு அளித்த ஒரு பேட்டியில் இந்த பாடலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்பதாகவும், இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதையும் ஏற்கனவே பார்த்தோம்.....

அஜித் ரசிகர்கள் தரும் மரியாதை- ஷாம்லி பெருமிதம்

அஜித் மனைவி ஷாலினிஅஜித்தின் சகோதரி ஷாம்லி தற்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்திலும், விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக்குரல் எழும்பியபோதிலும், நடிகர் சங்கம் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என சரத்குமார் உள்பட பலர் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று நடிகர் சங்கம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளத

'தெறி' கிளைமாக்ஸில் அட்லியை அசத்திய விஜய்

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தெறி' படத்தின் கோவா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது....