உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Tuesday, November 1, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மருமகளும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய், இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யாராய், ஒரே நாளில் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானார். உலக அழகி பட்டம் வென்று 3 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் ஐஸ்வர்யாராய் நடித்த அடுத்த தமிழ்ப்படமான ஷங்கரின் 'ஜீன்ஸ்' நல்ல வரவேற்பை பெற்றது.
இருப்பினும் ஐஸ்வர்யாராய் பாலிவுட்டில் முழுகவனம் செலுத்தினார். வருடத்திற்கு சுமார் நான்கு படங்கள் நடித்த ஐஸ்வர்யா ராய், கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் ராவணன், எந்திரன் உள்பட பல படங்களில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கு 2011 நவம்பரில் பெண்குழந்தை பிறந்தவுடன் ஒருசில வருடங்கள் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
கடந்த ஆண்டு முதல் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள ஐஸ்வர்யாராய் தற்போது ஒருசில இந்தி படங்களில் நடித்து வருகிறார். குடும்பம், நடிப்பு என இரண்டையும் பேலன்ஸ் செய்து வரும் ஐஸ்வர்யா ராய், இன்னும் அதிக படங்களில் நடித்து மென்மேலும் புகழ் பெற இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments