நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Friday,September 10 2021]

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் படத்தொகுப்பாளர் மோகன் அவர்களின் இளைய மகனான ஜெயம் ரவி, ’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானதால் அவருடைய முதல் பட டைட்டில் அவருடன் இணைந்து கொண்டது. ‘ஜெயம்’ வெற்றிக்கு பின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி, ஆதிபகவன், நிமிர்ந்துநில், ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிலிம்பேர் விருது உள்பட ஒரு சில விருதுகளையும் ஜெயம்ரவிக்கு பெற்று தந்தது.

இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டைட்டில் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அவருடைய மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் ஜெயம் ரவி மேலும் பல வெற்றிகளை குவிக்க நமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

More News

பிக்பாஸ் போட்டியாளராக 'செம்பருத்தி' சீரியல் நடிகை!

விஜய் டிவியில் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் மூடப்படுகிறதா? தொழிலாளர்கள் நிலைமை?

உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 20

ஒலிம்பிக் வீரர்களுக்கு பண்ணை வீட்டில் விருந்து வைத்து அசத்திய முதல்வர்!

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்ததில் இருந்தே படு உற்சாகத்தில் இருக்கிறார்.

கொரோனாவைவிட நிபா வைரஸ் கொடியது… சிடிசி ஏன் எச்சரிக்கிறது?

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CTC) கொரோனாவை விட நிபா வைரஸ் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

ஹரி-அருண்விஜய் படத்தின் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.