close
Choose your channels

வில்லனாக நடித்தாலும் ஹீரோ.. பகத் பாசிலை கொண்டாடும் ரசிகர்கள்..! பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Tuesday, August 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள இயக்குனரும் தமிழில் ’காதலுக்கு மரியாதை’ ’வருஷம் 16’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஃபாசில் மகன் தான் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் பகத் ஃபாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ’வேலைக்காரன்’ விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ மற்றும் உதயநிதி நடித்த ’மாமன்னன்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ’புஷ்பா’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, கேரள மாநில திரைப்பட விருது, பிலிம்பேர் விருது என மொத்தம் 19 விருதுகளை பெற்றுள்ளார். இவரது தனிச்சிறப்பு வில்லனாக நடித்தாலும் அவர் அந்த படத்தில் ஹீரோ போல் தான் தெரிகிறார் என்பதுதான்.

அதற்கு முக்கிய உதாரணம் ’மாமன்னன்’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பகத் ஃபாசிலுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நம்முடைய சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment