இளம்பெண்களின் கனவு நாயகன் 'ஆர்யா'வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இளம்பெண்களின் கனவு நாயகனுமான ஆர்யா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ஆர்யா, கடந்த 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கிய 'அறிந்தும் அறியாமலும்' என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகர் என்ற பிலிம்பேர் விருதை பெற்ற பெருமைக்குரியவர் ஆர்யா.
கடந்த 2009ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் 'நான் கடவுள்' படத்தில் நடித்த பின்னர் ஆர்யாவின் நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி தெரிந்தது. மதராசப்பட்டிணம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'அவன் இவன்', 'ராஜா ராணி' போன்ற படங்கள் ஆர்யா நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் ஆகும்,
அஜித்துடன் ஆர்யா நடித்த 'ஆரம்பம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஆர்யாவின் கோலிவுட் மார்க்கெட்டும் உயர்ந்தது.
ஒரு ஹீரோ அதிக படங்களில் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் தோன்றியவர் என்றால் அது ஆர்யாவாகத்தான் இருக்கும். 'ஒருகல் ஒருகண்ணாடி', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'ஜீவா', 'ரோமியோ ஜூலியட்', 'இன்று நேற்று நாளை', 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய படங்களில் நட்புக்காக நடித்துள்ளார்.
தற்போது ஆர்யா நடித்து வரும் 'கடம்பன்' திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடம்பன்' உள்பட அவர் நடிக்கவுள்ள அனைத்து படங்களும் வெற்றி பெற்று கோலிவுட்டில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments