சிவகார்த்திகேயன் பட டைட்டில் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 17 2016]
கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்த நாயகன் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM Studios நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

'ரஜினிமுருகன்' படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் இணைந்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணிபுரிந்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருள்நிதியின் ஆறாது சினம். சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாது சினம்' படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது...

'மருது' கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் விஷால் காயம்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'கதகளி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விஷால் நடித்து வரும் அடுத்த படமான ...

நொச்சிக்குப்பம் மீனவ பெண்களுடன் இறுதிச்சுற்று இயக்குனர்

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'இறுதிச்சுற்று' படம் மாபெரும் ஹிட்...

மஞ்சப்பை இயக்குனருக்காக காட்டுவாசியாகும் ஆர்யா

சமீபத்தில் வெளியான ஆர்யாவின் 'பெங்களூர் நாட்கள்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

த்ரிஷாவின் திடீர் அரசியல் பிரவேசம்

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாராகி வருகின்றனர்...