சிவகார்த்திகேயன் பட டைட்டில் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 17 2016]
கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்த நாயகன் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM Studios நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

'ரஜினிமுருகன்' படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் இணைந்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணிபுரிந்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.