கலியுகத்துல போராடுகிற ஒவ்வொருத்தர் கூடயும் இருக்காரு: 'ஹனுமான்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

பேராபத்திலிருந்து மனித குலத்தை காக்க நீ வந்தே ஆகவேண்டும் ‘ஹனுமான்’ என்று சாமியார் கோரிக்கை விடுத்தவுடன் மீண்டும் பூமிக்கு வரும் ‘ஹனுமான்’ செய்யும் மாயாஜாலங்கள் தான் இந்த படம் என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்துக்களின் புனித கடவுள்களில் ஒருவரான ‘ஹனுமான்’ குறித்து ஏற்கனவே பல திரைப்படங்கள் வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு திரைப்படம் தான் ‘ஹனுமான்’

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட பத்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தேஜா சாஜா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராஜ், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகிய இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆக்சன் காட்சிகள், மாயாஜால காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அமைந்துள்ள இந்த மூன்று நிமிட டைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு கயிறை கட்டி ஹெலிகாப்டரை நிறுத்தும் காட்சிகளை ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டில் திடீரென பாசமழை, ஆனந்தக்கண்ணீர்: காரணம் இதுதான்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் 75 நாட்கள் முடிந்த பின்னர் ஃபேமிலி வாரம் வரும் என்பதும்  போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து நிகழ்ச்சியை நெகிழ்ச்சி அடைய செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

'தளபதி 68' படத்தின் டைட்டில் இதுவா? அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் டைட்டில்?

தளபதி விஜய் நடித்து வரும் 68வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும்

சிறகடிக்க ஆசை':முத்துவால் மீண்டும் அவமானப்பட்ட மீனா.. ரோகிணி, ஸ்ருதிக்கு அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் முத்து,மீனா, மனோஜ், ரோகிணி, ரவி, ஸ்ருதி மற்றும் அண்ணாமலை,

திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரம் பெறுதல்.. சூரி படம் குறித்து சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சூரி முக்கிய கேரக்டரில் நடித்த 'ஏழு கடல் ஏழு மலை' என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் இந்த படம்

'எல்.ஐ.சி' படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் இன்னொரு படம்.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த 'லவ் டுடே' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நட்சத்திரமாக மாறி உள்ளார்.