close
Choose your channels

மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ள அடுத்த தமிழ் நடிகை!

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் சில மாதங்களாக இருந்த நிலையில் சமீபகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உலகின் முன்னணி சுற்றுலாதளங்களை கொண்ட மாலத்தீவு, தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை வளப்படுத்த இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கொண்ட நடிகைகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி தங்கள் நாட்டிற்கு வரவழைத்தது.

இந்த சலுகையை பயன்படுத்தி கொண்டு கடந்த சில வாரங்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர். முதலில் தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து தமிழ் நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங், சமந்தா உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்

மாலத்தீவுக்கு சென்ற நடிகைகள் அங்கிருந்து கொண்டே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களும் மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும் அழகையும் புகைப்படங்களாக பதிவு செய்து மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை சுற்றுலா பயணிகளுக்கு தூண்டினர்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்றவர் நடிகை ஹன்சிகா. இவர் தனது மாலத்தீவு பயணத்தை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் ஒருசில புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். ஹன்சிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் இவரும் அந்நாட்டின் சலுகையில் தான் மாலத்தீவு சென்றிருப்பார் என கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஹன்சிகாவின் கண்கவர் கவர்ச்சி புகைப்படங்களை மாலத்தீவு அழகோடு ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment