இட்லி, தோசை, பில்டர் காபி.. நானும் தமிழ் பொண்ணுதான்.. ஹன்சிகா வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஹன்சிகா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள ஓட்டலில் இட்லி, தோசை, பில்டர் காபி சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டு, "மும்பையில் பிறந்திருந்தாலும் நானும் தமிழ் பொண்ணுதான்," என்று தமிழில் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, அதன் பின்னர் ’எங்கேயும் காதல்’, ’வேலாயுதம்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’மான்கராத்தே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ’ரவுடி பேபி’, ’காந்தாரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழு மில்லியன் ஃபாலோயர்களை வைத்து உள்ளார்.
அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் தனது குடும்ப புகைப்படங்களை ஹன்சிகா பதிவு செய்த நிலையில், சற்றுமுன் நகர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம், மீனாட்சி அம்மனை தரிசித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறினார்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில், மதுரை ஓட்டல் ஒன்றில் இட்லி, தோசை, பில்டர் காபி சாப்பிட்ட ஹன்சிகா, "மும்பையில் பிறந்தாலும் மனசுல எப்போதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு," என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு நடிகை த்ரிஷா உள்பட சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com