இட்லி, தோசை, பில்டர் காபி.. நானும் தமிழ் பொண்ணுதான்.. ஹன்சிகா வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

நடிகை ஹன்சிகா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள ஓட்டலில் இட்லி, தோசை, பில்டர் காபி சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டு, மும்பையில் பிறந்திருந்தாலும் நானும் தமிழ் பொண்ணுதான், என்று தமிழில் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 

தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, அதன் பின்னர் ’எங்கேயும் காதல்’, ’வேலாயுதம்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’மான்கராத்தே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ’ரவுடி பேபி’, ’காந்தாரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழு மில்லியன் ஃபாலோயர்களை வைத்து உள்ளார்.

அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் தனது குடும்ப புகைப்படங்களை ஹன்சிகா பதிவு செய்த நிலையில், சற்றுமுன் நகர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம், மீனாட்சி அம்மனை தரிசித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறினார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில், மதுரை ஓட்டல் ஒன்றில் இட்லி, தோசை, பில்டர் காபி சாப்பிட்ட ஹன்சிகா, மும்பையில் பிறந்தாலும் மனசுல எப்போதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு, என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு நடிகை த்ரிஷா உள்பட சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா, கார்த்தி நடிக்கும் அடுத்த படங்களின் ரிலீஸ் தேதி.. வைரல் தகவல்கள்..!

சூர்யா நடித்து முடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

ஜாலி மூடில் ஹனிமூன் கொண்டாடும் மேகா ஆகாஷ்.. எந்த நாட்டிற்கு தெரியுமா?

நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தி

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது? ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் பாவாடை தாவணி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்கள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. உறுதி செய்யப்பட்ட தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேற்று முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

நாம சூரியனா இருப்போம், எந்த நாய் வேண்டுமானாலும் குலைச்சிகிட்டு போகட்டும்: வெங்கடேஷ் பட் வீடியோ..!

நாம சூரியனாக இருப்பேன். நம்மைப் பற்றி எந்த நாய் வேண்டுமானாலும் குலைத்து விட்டுப் போகட்டும் என்று வெங்கடேஷ் பட் எமோஷனலாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.