ஹன்சிகா 53 சுவாரசியம் ..! திரில்லர் கதையுள்ள சிங்கிள் ஷாட் மூவி......!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹன்சிகாவின் 53-ஆவது படமாக, ஒரு புதிய திரில்லர் கதையுள்ள சிங்கிள் ஷாட் மூவி அமைந்துள்ளது.
ஒரே ஷாட்டில் முழு திரைப்படத்தையும் எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதை பல இயக்குனர்கள் முயற்சி செய்து, விருதுகளையும் அள்ளியுள்ளனர். அந்த வகையில் தெலுங்கில் ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ள படத்திற்கு "ஒன் நாட் பைவ் மினிட்ஸ்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் உள்ள சுவாரசியம் என்னவெனில் நடிகை ஹன்சிகா மட்டுமே இதில் நடிக்கவுள்ளார். முதன் முறையாக தொடர்ந்து 105 நிமிடங்கள்ஒரே ஷாட்டில் எடுக்கக்கப்பட்டு, ஒரு நபர் நடிக்கும் படம் இதுவே.
ஒரு வீட்டிற்குள் ஹன்சிகா இருக்கிறார், அங்கு அவர் தனிமையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத்தான் படமாக்க உள்ளனர். சைக்கலாஜிகல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை, ரியல் டைமில் காட்சிப்படுத்த உள்ளனர்.இப்படத்தை Raja Dussa இயக்க, Bommak Shiva தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டேன், சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் தான் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
Started a new project yesterday . #105
— Hansika (@ihansika) July 20, 2021
#oneshotmovie , really excited for this one . Wishing the team all the very best . #105minutes #hansika53rd pic.twitter.com/Wei2Ovrjuz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com