'டேய் உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல.. கோமாளியை மிரட்டிய ஹன்சிகா.. வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோமாளிகளில் ஒருவரான புகழை நீ அதிகமாக பெண்களுடன் விளையாடுகிறாய் என ஹன்சிகா மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்து கடந்து சில வாரங்களாக நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக புரமோஷன் பெற்றுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக ஷிவாங்கி, மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் ஆகியோர்களும் கோமாளிகளாக சில்மிஷம் சிவா, தங்கதுரை, குரேஷி, சிங்கப்பூர் தீபன், புகழ், மோனிஷா, ரவீனா, மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து aஅகியோர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த எலிமினேஷன் வாரத்தில் கிஷோர் ராஜ்குமார் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதேபோல் இந்த வாரமும் எலிமினேஷன் வாரம் என்பதால் குக்குகள் மிகவும் சீரியஸாக சமையல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தின் புரோமோ வீடியோவில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் காட்சிகள் உள்ளன. அதில் புகழ், பெண்களுடன் விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது நீ பெண்களுடன் ரொம்ப விளையாடுற, உனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல என்று மிரட்டும் தொனியில் ஹன்சிகா பேச, அப்போது புகழ் எதுவும் தெரியாத மாதிரி ’உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்க ஹன்சிகா சிரிக்கிறார்.
இது மட்டும் இன்றி மேலும் சில புரமோ வீடியோக்கள் வெளியாகி இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகாவின் திருமண வீடியோ இந்த வாரம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளதை அடுத்து அந்த நிகழ்ச்சியை புரமோஷன் செய்வதற்காக ஹன்சிகா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com