கருணாநிதி மறைவு எதிரொலி: ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்களும், சக நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 50வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து இன்று ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் அறிவிப்பு இல்லை என்றும், இந்த அறிவிப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஹன்சிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் தலைவரின் மறைவிற்கு மதிப்பு கொடுத்து ஹன்சிகா எடுத்துள்ள இந்த முடிவுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
As mark of respect to our beloved leader #kalaignar karunanidhi ji . We wil be rescheduling the announcement of the title .date and time will be announced soon . Thank u for your patience #hansika50th
— Hansika (@ihansika) August 9, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments