சிம்புவுக்கு ஹன்சிகா அனுப்பிய மெசேஜ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ’மஹா’ என்பதும் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ஹன்சிகாவுக்கு இது ஐம்பதாவது படம் என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மத்திய, மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதை அடுத்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து, அதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தனது 50-வது திரைப்படமான ’மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஹன்சிகா, இந்த படம் சிறந்த படமாக இருந்தது என்றும் இந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி என்றும் பதிவு செய்துள்ளார். ஹன்சிகாவின் இந்த பதிவை சிம்பு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
And it’s a wrap on my50th movie . It has been a great experience and I’m grateful to everyone who has been a part of this journey. Thank you @Etceteraenter @malikstreams @dir_URJameel a special thanks to @silambarasanTRS #hansikas50th pic.twitter.com/qqSXtxXIZe
— Hansika (@ihansika) October 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com