பிரபல இயக்குனரின் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் ஹன்சிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரின் அடுத்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஆர் கண்ணன், ‘ஜெயம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ‘ கண்டேன் காதலை’ ‘வந்தான் வென்றான்’ ’சேட்டை’ ’இவன் தந்திரன்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் உருவான ’தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது .
இந்த நிலையில் தற்போது ’காசேதான் கடவுளடா’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ஆர்.கண்ணன் அடுத்ததாக சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ஒன்றை காமெடி கலந்து இயக்கவுள்ளார். அவரது சொந்த நிறுவனமான மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை இன்று தொடங்கியது. மேலும் இந்த படத்திற்காக மிகப்பெரிய பொருட்செலவில் சயின்ஸ் செட் போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
.@masalapix @Dir_kannanR in association with #FocusFilms directs a science fiction-Fantasy-Horror comedy film with @ihansika . #MasalapixNo7
— meenakshisundaram (@meenakshinews) February 28, 2022
Shooting started with Pooja today.
A massive science lab set has been erected at ECR.@KabilanVai @subsi991 @johnsoncinepro #Aug15 pic.twitter.com/wfA705aLlR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments