திருமணமாகி விவாகரத்தானவரை கைப்பிடித்தது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த ஹன்சிகா..!
- IndiaGlitz, [Thursday,February 02 2023]
நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிலையில் அவரை திருமணம் செய்த சோஹைல் கதுரியா ஏற்கனவே அவரது தோழியை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் திருமணமாகி விவாகரத்து ஆனவரை ஹன்சிகா திருமணம் செய்வது ஏன் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இதுவரை பதில் சொல்லாத நிலையில் அவரது திருமணம் வீடியோ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த வீடியோவின் டீசரில் ஹன்சிகா இதுகுறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தனது அம்மாவிடம், ‘நீங்கள் தான் அடிக்கடி சொல்வீர்கள், யாருடைய கடந்த காலத்தையும் பார்க்க கூடாது என்று, அதனால்தான் நான் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்ய ஓகே சொன்னேன் என்று அவர் கண் கலங்கியபடி பேசிய காட்சிகள் உள்ளது. இதனை அடுத்து அவர் தனது கணவர் சோஹைல் கதுரியாவின் கடந்த காலத்தை பற்றி கவலைப்படவில்லை என்பதை இதன் மூலம் உறுதி செய்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ரிங்கி என்ற பெண்ணை சோஹைல் கதுரியா திருமணம் செய்தார். ரிங்கி, ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பதும், இந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.
ஹன்சிகா - சோஹைல் கதுரியா திருமண வீடியோ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.