நிஜ வாழ்க்கையில் ஆணாக மாறினால்.. ஹன்சிகா பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஹன்சிகா ’பார்ட்னர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் திடீரென ஆணாக இருந்த ஒருவர் பெண்ணாக மாறினால் என்ன நடக்கும் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் உண்மையிலேயே அவர் தனது வாழ்க்கையில் ஆணாக மாறினால் என்ன ஆசை? என்பது குறித்து தனது பேட்டியில் குறித்துள்ளார்.
ஆதி, யோகி பாபு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ’பார்ட்னர்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது என்பதும் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்தில் யோகி பாபு கேரக்டர் திடீரென பெண்ணாக மாறுகிறது என்பதும் அந்த பெண்தான் ஹன்சிகா என்பது போல கதை செல்கிறது. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட ஹன்சிகா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். ’யோகி பாபு தூங்கி எழுந்தவுடன் ஹன்சிகாவாக மாறுவது தான் இந்த படத்தின் கதை என்றும் யோகி பாபு பாடி லாங்குவேஜில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார்.
ஒருவேளை நிஜ வாழ்க்கையில் ஆணாக மாறினால் ஜோ பைடன் ஆக மாற வேண்டும் என்று ஆசை என்று தெரிவித்த ஹன்சிகா, அந்த அளவுக்கு அவரிடம் பவர் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு தன்னிடம் பெரிய மாற்றம் இல்லை என்றும் எனக்கு கூடுதலாக ஒரு நண்பர் கிடைத்து இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்துக் கொண்டு இருப்பதாகவும் இன்னும் பல குழந்தைகளை தத்தெடுக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com