ஆபரேஷன் செய்து உடம்பை குறைத்தாரா? நெட்டிசன் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஹன்சிகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபரேஷன் மூலம் உடம்பை குறைத்து விட்டு, யோகா செய்து உடம்பை குறைத்ததாக ஹன்சிகா பொய் சொல்கிறார் என நெட்டிசன் ஒருவர் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு நடிகை ஹன்சிகா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா என்பதும் அவர் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொழுகொழுவென ஹன்சிகா இருந்த நிலையில் தற்போது ஸ்லிம்மாக மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் தொடர்ந்து யோகா செய்வதால் தான் நம் உடல் எடை குறைந்தது என்று ஹன்சிகா கூறி உள்ள நிலையில் நெட்டிசன் ஒருவர் அவரது இந்த கருத்துக்கு கேலி செய்துள்ளார்.
ஆபரேஷன் மூலம் உடம்பை குறைத்து விட்டு யோகாவால் உடம்பு குறைந்ததாக ஹன்சிகா பொய் சொல்கிறார் என பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த ஹன்சிகா ’நான் என்னுடைய உடலை குறைப்பதற்கு கடினமாக உழைத்து இருக்கிறேன். அதில் யோகாவும் ஒன்று. இதில் ஒரு ஜாலியான விஷயம் என்னவென்றால் யோகா வெறுப்புகளுக்கு நேர்மறையான விஷயங்களை பரப்ப உதவும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிலடிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments