ஹன்சிகா நடிக்கும் அடுத்த தமிழ் திரைப்படம்: ஹீரோ, இயக்குனர் இவர்கள் தான்!

  • IndiaGlitz, [Saturday,October 08 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடிப்பில் உருவான ’மஹா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஹன்சிகாவின் அடுத்த தமிழ் திரைப்படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகனாக மெட்ரோ சிரிஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

மெட்ரோ சிரிஷ் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்தாலும் அவர் ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது வேறு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

சமீபத்தில் மெட்ரோ சிரிஷ் நடித்த ’பிஸ்தா’ திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் பாசிட்டிவ் ரிசல்ட்களைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆர் கண்ணன் இயக்கிய ’காசேதான் கடவுளடா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் அநேகமாக நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இதுக்கு மேல என்ன கிளாமர் இருக்கு? யாஷிகாவின் வைரல் இன்ஸ்டா போஸ்ட்!

தமிழ் திரையுலகில் நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு

ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.. இயக்குனர் இவர் தான்!

நடிகர் ஆர்யா நடித்த 'கேப்டன்'  திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் 8 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை இரவு தொடங்கப்பட இருக்கும் நிலையில் இன்று இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? அப்ப சூர்யா என்ன ஆச்சு?

'சூரரை போற்று' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா தற்போது 'சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.

மீண்டும் மேலாடையின்றி போஸ்..சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களாக அதை நிறுத்தி இருந்த நிலையில் தற்போது