தனுஷின் மாஸ் பாடல் வரிகளில் ஹன்சிகாவின் அடுத்த பட டைட்டில்!

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

தனுஷ் நடித்த படத்தில் இடம்பெற்ற மாஸ் பாடல் ஒன்றின் வரிகளையே ஹன்சிகா நடிக்கும் அடுத்த படத்துக்கு வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஹன்சிகா தற்போது சிம்புவுடன் ’மஹா’ மற்றும் ’பார்ட்னர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பதும், அதேபோல் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், இந்த படங்கள் அனைத்தும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹன்சிகா நடிக்கும் அடுத்த படத்துக்கு ’ரவுடி பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ், சாய்பல்லவி நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அதே வரிகளை ஹன்சிகாவின் அடுத்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ராஜு சரவணன் இயக்கவுள்ளார். செல்லத்துரை ஒளிப்பதிவில், சாம் சிஎஸ் இசையில், வைரமுத்து பாடல் வரிகளில் இந்தப் படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரமேஷ் பிள்ளை என்பவர் தயாரிக்க உள்ளார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பை கவியரசு வைரமுத்து அவர்கள் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இமான் அண்ணாச்சியால் ஆரம்பித்த முதல் சண்டை: அனல்பறக்கும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் ஒரு சில நாட்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதும் அதன் பின் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அணி அணியாகப் பிரிந்து

ஷாருக்கான் மகனுக்கு பெயில் கிடைக்காதது ஏன்? மாஃபியா கும்பலுடன் தொடர்பா?

மும்பை அருகே சொகுசு கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்டியில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்

ஆக்ஷன் காட்சிக்காக பயிற்சி எடுத்த பிரபல நடிகர்… விபரீதத்தில் முடிந்த சம்பவம்!

தெலுங்கில் இயக்குநர் லிங்குசாமி இயக்கிவரும் புது படத்தில்  ஹீரோவாக முன்னணி நடிகர் ராம் பொத்னேனி நடித்துவருகிறார்.

40 வயதிற்கு மேலுள்ள பெண்கள் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?

கொரோனா காலத்தில் ஒருசிலர் வொர்க்அவுட், ஜிம் என்று தங்களுடைய வாழ்க்கை முறை செழுமையாக மாற்றி அமைத்திருக்கின்றனர்

சென்னையில் மழை நீடிக்குமா? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்