சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்!
- IndiaGlitz, [Saturday,August 21 2021]
பிரபல நடிகை ஹன்சிகாவின் அடுத்த படம் சீனா மற்றும் கொரியாவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
அதுமட்டுமின்றி இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
உலக சினிமா வரலாற்றில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்த மூன்றாவது திரைப்படமான இந்த படம் 6 நாட்களில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.