ஹன்சிகாவின் அடுத்த படம்.. பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஹீரோ: மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,March 08 2023]

ஹன்சிகாவின் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹன்சிகா நடித்த 50வது திரைப்படமான ’மஹா’ கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது சுமார் 7 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னரும் திரையுலகில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவின் அடுத்த படத்தை இயக்குனர் இகோர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, ஹன்சிகா, ஜனனி துர்கா, சௌமிகா, பாண்டியன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும் சரண்யா பாக்யராஜ் திரைக்கதையும் பொன் பார்த்திபன் வசனமும் எழுத உள்ளனர். சந்திரகுமார் இந்த படத்தை படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் ’மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ‘ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு’ என்ற கேப்ஷன் உடன் வெளியாகி உள்ளது.

More News

முதல்முறையாக வெளியூருக்கு இரட்டை குழந்தைகளை அழைத்து சென்ற நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் குழந்தையுடன் நயன்தாராவை புகைப்படம்

ஷங்கர் - ராம்சரண் தேஜா படத்தின் டைட்டில் இதுவா? அனைத்து மொழிகளுக்கும் ஒரே டைட்டில்?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்துவரும் 'ஆர்சி 15' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன

ஆடை அணியாமல் மகளிர் தின வாழ்த்து சொல்ல வேண்டுமா? ஆண்ட்ரியாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா மகளிர் தினத்திற்கான ஸ்பெஷல்

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்த நிலையில் அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிம்பு-தேசிங்கு பெரியசாமி படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் குஷி..!

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெற