தண்ணீரில் இருக்கும் ஹன்சிகாவுக்கு முத்தம் கொடுக்கும் புதிய நண்பர்கள்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

நடிகை ஹன்சிகாவுக்கு அவரது புதிய நண்பர்கள் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான ஹன்சிகா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் திருமணத்திற்கு பின்னரும் அவர் தமிழ் உட்பட சில மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு 6.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராமில் அவர் தான் நடிக்கும் திரைப்படங்கள் உட்பட பல கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தண்ணீருக்குள் டால்பின்களுடன் விளையாடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்,. இதில் சில டால்பின்கள் ஹன்சிகாவுடன் விளையாடுவது, முத்தம் கொடுப்பது உள்ளிட்ட காட்சிகள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தற்போது ’கார்டியன்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்ட நிலையில் ’ரௌடி பேபி’ ’காந்தாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை அனைத்தும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.