சசிகுமாரின் 'கொடிவீரன்' படத்தில் 3 நாயகிகள்

  • IndiaGlitz, [Tuesday,March 21 2017]

'குட்டிப்புலி' இயக்குனர் முத்தையாவுடன் 'கொடிவீரன்' என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ள சசிகுமாருக்கு, ஜோடியாக ஹன்சிகாவும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் மூன்றாவது நாயகியாக இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளாராம். பொதுவாக முத்தையாவின் படங்களில் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று நாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதால் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்களின் கூட்டமே இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

நயன்தாரா படத்திற்கு கிடைத்த அதிர்ச்சி ரிசல்ட்?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள 'டோரா' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பில் இருந்தே தெரிந்ததே

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ஆர்.கே.நகர் வேட்பாளர்

தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இந்த ஒரு தொகுதியின் வெற்றியில்தான் அதிமுக ஆட்சி தொடர்வதும், பறிபோவதும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்

பிரபல ஹீரோவுக்கு வில்லனாகும் அர்ஜுன்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' திரைப்படத்தை அடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ள படம் 'கொடிவீரன்'. வழக்கம்போல் முத்தையாவின் கிராமத்து ஆக்சன் படமான இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

கமல் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனு

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பேட்டியில் அவர் தெரிவித்த ஒரு கருத்துக்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

ரஜினி ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய ஜியோ

சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் உலக அளவில் மாபெரும் சாதனை புரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக இந்திய திரைப்படங்களில் வேறு எந்த படத்தின் டிரைலரும் நெருங்க முடியாத அளவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது...