ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' நிகழ்ச்சியின் டிரெய்லர்: டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
'பிப்ரவரி 10 முதல் ஒளிபரப்பாகவுள்ள ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' நிகழ்ச்சியின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.
ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு தேவதையின் திருமணம், உணர்வுப்பூர்வமான தருணங்கள், மனம் நெகிழும் காட்சிகள், சந்தோஷ கொண்டாட்டங்கள் மற்றும் பல மறக்க முடியாத நிகழ்வுகள் என அனைத்தும் ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியாவின் திருமணத்தில் நடந்தது. இந்த பிரமாண்டமான திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. இந்த திருமண விழாவை கண்டுகளிக்க நாடு முழுதும் ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தனர். இந்திய பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் ‘ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா’ நிகழ்வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.
நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த கணம் முதல், திருமண திட்டமிடல்கள், திருமண வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணத்தை நடத்த செய்த போராட்டங்கள் என நடந்த அனைத்தையும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் நிகழ்ச்சியான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' காண்பிக்கும். ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வெறும் ஆறு வாரங்களில் நடந்த மாயாஜாலம் இந்த திருமணம். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு வந்த பிரச்சனைகள் அனைத்தையும் எப்படி சமாளித்தார்கள் என்பது பற்றி ஒரு முழு பார்வையைக் கொடுக்கும்.
இந்த நிகழ்ச்சி குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறுகையில், சிறு வயதிலிருந்தே எனக்கு என்னுடைய திருமணம் பற்றிய கனவு நிறைய இருந்தது. எனக்கும் சோஹேலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தபோது, எனது முழு குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது, எனது கனவுகள் நனவாகவுள்ளது என்பதை உணர்ந்தேன். திருமண நாளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பத்திரமாக பொக்கிஷப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், எனவே முழு நிகழ்வையும் படமாக்க முடிவு செய்தோம்.
ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் தான் திருமணம் நடந்தது, இது என்னுடைய கனவு ஸ்தலம். எனது கனவு திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் திட்டமிட்டு முடிக்க ஆறு வாரங்கள் ஆனது! அது ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாக இருந்தது. அந்த ஆறு வாரங்களில் நாங்கள் சிரித்தோம், அழுதோம், சண்டையிட்டோம், ஆனால் இறுதியில் ஒரு விசித்திர மாயாஜாலமாக என் கனவு திருமணம் நடந்தேறியது.
எனது மகிழ்ச்சியை அந்த இனிமையான தருணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், அதைச் செய்வதற்கான ஒரு தளத்தை எனக்கு வழங்கியதற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு நன்றி.
Here you go! The awaited trailer of #HansikasLoveShaadiDrama is out now!
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 7, 2023
Watch #HotstarSpecials #HansikasLoveShaadiDrama on #Disneyplushotstar from Feb 10@ihansika #SohaelKhaturiya @Avinaash_Offi #Uttam_Domale @nowme_datta @sajeed_a @ajaym7 #HansikaWedsSohael #Hansika pic.twitter.com/7DTlIjzqhC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com