ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமான நிலையில் அவரது திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார் என்ற செய்தி வெளியான போது பல இதயங்கள் உடைந்து போனது. ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளாக அறியப்பட்டது.
இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார்கள்.
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோ-வான 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஷோ, நடிகை ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடர போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, வெறும் ஆறு வாரங்களில் இப்படி ஒரு தேவதை திருமணத்தை நேரத்தை வென்று குடும்பமாக சேர்ந்து எப்படி நடத்தினார்கள் என்பது வரை, திருமண திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வரை கூறும் அற்புதமான கதைகள் அடங்கிய ஒரு ஷோ-வாக இருக்கும்.
அதோடு, ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் ஹன்சிகாவின் திருமணத்தை சுற்றி நடந்த அசௌகரியமான பிரச்சனையை பற்றியும் கூறுகிறார்கள். இது அவரது கனவு நாளை தடம் புரள செய்யும் அளவிற்கு எவ்வாறு அச்சுறுத்தியது என்றும் விளக்குகிறார்கள்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஹன்சிகா இணைந்து ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர், வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது
#HotstarSpecials #HansikasLoveShaadiDrama coming soon on #disneyplushotstar @ihansika #SohaelKhaturiya #Uttam_Domale @nowme_datta @sajeed_a @Avinaash_Offi @ajaym7 pic.twitter.com/UowMmaG5rB
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 18, 2023
What is a shaadi without a little drama? #HotstarSpecials #HansikasLoveShaadiDrama coming soon!
— Hansika (@ihansika) January 18, 2023
#Uttam_Domale @nowme_datta @sajeed_a @Avinaash_Offi @ajaym7
@DisneyPlusHS pic.twitter.com/PbebMagivN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments