'புதிய தொடக்கம்'.. திருமணத்திற்கு பின் நல்ல செய்தி சொன்ன ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Thursday,October 17 2024]

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அவர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது கூட ரவுடி பேபி, காந்தாரி, கார்டியன் உட்பட ஆறு படங்களில் நடித்து பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹேல் கட்டாரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சுமார் 7 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டுள்ள ஹன்சிகா, தனது புதிய வீட்டில் குடியேறிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கணவருடன் புதிய வீட்டிற்குள் நுழைவது மற்றும் யாகம் நடத்தும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இன்னொரு நல்ல செய்தியையும் சொல்லுங்கள் என்று பலர் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

இந்த வாரம் எத்தனை தமிழ் படங்கள்? ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் OTTயில் வெளியாகி வருகின்றன

எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும்.?

பிரபல ஜோதிடர் வித்யா கார்த்திக் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தானம் மற்றும் தர்மம் பற்றியும், ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

⚜️முருகரிடம் சென்றால் நம் விதியை மாற்ற முடியுமா.? - Jeevitha சுரேஷ்குமார்

பிரபல ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சியாளரும், "The Great Indian கிட்சேன்" படத்தின் எழுத்தாளருமான ஜீவிதா சுரேஷ்குமார்

ரஜினிகாந்த் - மணிரத்னம் இணையும் படம் குறித்து சுஹாசினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில்,

அஜித் படம் ரிலீஸாகும் தேதியில் விக்ரம் படம்? வேற லெவல் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் கூட உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தினத்தில் விக்ரம் நடித்து