ஹன்சிகாவிற்காக பாட்டு பாடிய கமல்-ரஜினி நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் ஜெயப்ரதா. நடிகையாக மட்டுமின்றி பிரபல அரசியல்வாதியாகவும் ஜொலித்து வரும் ஜெயப்ரதா, தற்போது தனது மகன் நடிக்கும் 'உயிரே உயிரே' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகச்சிறப்பாக நடந்தது.
ஜெயப்ரதா மகன் சித்து, ஹன்சிகா, அஜய், ஆடுகளம் நரேன், சாயாசிங், ரோஹினி, உமா பத்மநாபன், ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்துள்ளார். இவரது இசையமைப்பில் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இவற்றில் லிசன் டு மை ஹார்ட் (Listen to My Heart) என்று தொடங்கும் ஒரு பாடலை ஜெயப்ரதாவே பாடியுள்ளார். இந்த பாடல் படத்தில் ஹன்சிகா பாடுவதாக வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விக்ரம் குமார் கதை-வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே நாகேஸ்வரராவ், நாகார்ஜுனன், நாக சைதன்யா ஆகிய மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த 'மனம்' படத்தை இயக்கியவர் என்பதும், தற்போது சூர்யா,சமந்தா நடிப்பில் உருவாகி வரும் '24' படத்தை இயக்கி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout