ஏப்ரல் 1-ல் ரிலீஸ் ஆகும் அடுத்த ஹன்சிகா படம்

  • IndiaGlitz, [Sunday,March 27 2016]

ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போக்கிரி ராஜா' எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் நடித்து முடித்த மற்றொரு படமான 'உயிரே உயிரே' திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுரித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும்', கே.விஸ்வநாத் இயக்கிய 'சலங்கை ஒலி', விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', கமல்ஹாசனின் 'தசாவதாரம்' உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயப்ரதாவின் மகன் சித்து ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை ஜெயப்ரதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் '24' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்தில் நிதின், நித்யாமேனன் நடித்த 'Ishq' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் 'உயிரே உயிரே' என்பது குறிப்பிடத்தக்கது.