திருமணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா.. வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Friday,December 09 2022]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் அவர் தனது கணவருக்கு அல்வா கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஹன்சிகா என்பதும் இவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்னர் கதுரியா என்பவருக்கும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது என்பதும், திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஹன்சிகாவின் குடும்ப வழக்கத்தின்படி திருமணமான பிறகு கணவருக்கு அல்வா செய்து பரிமாறுவது ஒரு வழக்கமாக இருந்து வரும் நிலையில் அந்த அல்வாவை கணவருக்கு பரிமாறுவது போன்ற புகைப்படத்தை ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
மேலும் சமீபத்தில் தனது கணவருடன் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஹன்சிகாவிடம் தேனிலவு எப்போது என்று கேட்டபோது வெட்கச்சிரிப்புடன் அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.